ரூ 8.51 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா TUV300

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய TUV300 காம்பேக்ட் SUV மாடலை ரூ 8.51 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை. மேலும் சில கூடுதல் வண்ண தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனம் TUV300 மாடலை 2015 ஆம் ஆண்டு வெளியிட்டதிலிருந்து முதல் முறையாக தற்போது தான் மேம்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் AMT மாடல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக மஹிந்திரா TUV300 மாடலின் சென்னை ஷோரூம் விலை விவரம்: 

  • T4+ - ரூ 8.51 லட்சம் 
  • T6+ - ரூ 9.11 லட்சம் 
  • T8 - ரூ 9.75 லட்சம் 
  • T10 - ரூ 9.99 லட்சம் 
  • T10 Dual Tone - ரூ 10.25 லட்சம் 
  • T10 (O) - ரூ 10.27 லட்சம் 
  • T10 (O) Dual Tone - ரூ 10.52 லட்சம் 

புதிய மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா TUV300 மாடலில் புதிய பியானோ கருப்பு நிற முகப்பு கிரில், புதிய ஏர் டேம், பகல் நேரத்தில் ஒளிரும் LED உடன் கூடிய ஸ்மோக்ட் முகப்பு விளக்குகள், புதிய சைடு கிளாடிங், கிளியர் லென்ஸ் உடன் கூடிய பின்புற விளக்குகள், புதிய X வடிவ ஸ்பேர் வீல் கவர் ஆகியவை வெளிப்புறத்தில் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை, மேலும் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், EBD உடன் கூட ABS, இரண்டு காற்றுப்பை என முந்தய மாடல்களில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இது 100 bhp @3750 rpm திறனும் 240 Nm @ 1600-2800 rpm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வில் மட்டுமே கிடைக்கும். மஹிந்திரா TUV300 மாடல் மட்டும் தான் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட SUV மாடல் செக்மென்ட்டில் பாடி ஆன் பிரேம் (body-on-frame) SUV மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.