ரூ 9.54 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டாடா நெக்ஸன் AMT

டாடா நிறுவனம் நெக்ஸன் AMT மாடலை ரூ 9.54 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் விலையில் வெளியிட்டுள்ளது. இதன் பெட்ரோல் AMT  மாடல் ரூ 9.54 லட்சம் விலையிலும் டீசல் AMT மாடல் ரூ 10.51 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் XZA+ எனும் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் மூன்று சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் நான்கு சிலிண்டர் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் கிடைக்கும். 1496cc கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் 110PS @ 3,750rpm திறனையும் 260Nm @ 1,500-2,750rpm இழுவைதிறனையும் வழங்கும். மற்றும் 1198cc கொள்ளளவு கொண்ட பெட்ரோல் என்ஜின் 110 PS @ 5,000rpm திறனையும் 170Nm @ 2,000-4,000rpm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடலின் இரண்டு எஞ்சின்களிலுமே ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் கூடுதலாக ஆரஞ்சு வண்ணத்தில் கிடைக்கும். ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேட்டிக் குளிரூட்டி, ஹர்மான் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், பின்புற சென்சார் மற்றும் கேமரா என இந்த மாடலில் ஏராளமான உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த மாடல் 209 மில்லி மீட்டர் தரை இடைவெளி கொண்டது. இந்த செக்மென்ட்டில் மட்டும் இல்லாமல் டாடா நிறுவன மாடல்களிலேயே இது தான் அதிக தரை இடைவெளி கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.