மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு மாடல்களை வெளியிட்டது பஜாஜ்

பஜாஜ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. டாமினோர் முதல் பிளாட்டினா வரை அனைத்து மாடல்களையும் மேம்படுத்தியுள்ளது பஜாஜ் நிறுவனம். 

பஜாஜ் டிஸ்கவர்

பஜாஜ் நிறுவனம் புதிய டிஸ்கவர் 110 மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஸ்கவர் 125 மாடல்களை முறையே ரூ 50,496 மற்றும் ரூ 53,491 விலையிலும் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்குகள், புதிய பின்புற விளக்குகள், புதிய இருக்கை, புதிய இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. 

டிஸ்கவர் 110 மாடலில் புதிய 115cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.5 bhp திறனும் 9.81Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதற்கு முன்னர் டிஸ்கவர் மாடல் 100cc எஞ்சினுடன் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிஸ்கவர் 125 மாடலில் அதே 124cc கொள்ளளவு கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 10.8 bhp திறனும் 11Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் கருப்பு, சிவப்பு மற்றும் ப்ளூ என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

பஜாஜ் அவெஞ்சர் 

பஜாஜ் நிறுவனம் 150cc எஞ்சின் கொண்ட அவெஞ்சர் மாடல்களை மேம்படுத்தவில்லை. 220cc எஞ்சின் கொண்ட அவெஞ்சர் மாடலில் மட்டும் சில ஒப்பனை மாற்றங்களும் சில கூடுதல் உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 மற்றும் குரூஸர் 220 மாடல்களில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய முக்கோண வடிவ முகப்பு விளக்குகள், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் ஆகியவையும் சில குரோம் இன்செர்ட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் டாமினோர் 

பஜாஜ் நிறுவனம் டாமினோர் மாடலில் ஒப்பனை மற்றும் எஞ்சினில் எந்த மாற்றமும் கொடுக்கப்படவில்லை. புதிதாக மேட் கருப்பு, சிவப்பு மற்றும் ப்ளூ என மூன்று வண்ணங்களில் கூடுதலாக கிடைக்கும். மேலும் இந்த மாடலில் புதிய கோல்ட் வண்ண அலாய் வீலும் கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் V 

இந்த மாடலில் பெரிய மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை கூடுதலாக பின்புற இருக்கையில் பேக் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 

பஜாஜ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட பஜாஜ் பல்சர் பிளாக் சீரீஸ் மாடல்களை காட்சிப்படுத்தியது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

பஜாஜ் பிளாட்டினா 

இந்த மாடலில் புதிய பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய முகப்பு விளக்குகள் மட்டும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.