லம்போர்கினி உரஸ்

உலகில் புகழ் பெற்று விளங்கும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி உரஸ் எனும் SUV  மாடலை 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது அந்த மாடல் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன் கான்செப்ட் மாடல் 2012 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இந்த என்ஜின் 650Bhp திறனை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைபிரிட் என்ஜின் கொண்ட மாடலும் வெளியிடப்படுமாம். இந்த ஆண்டு இறுதிக்குள் இதன் உற்பத்தியை தொடங்க  லம்போர்கினி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியிடப்பட்டாலும் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது தெரியவில்லை. இந்த மாடளுக்காக ஆலையின்  உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை பெற மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.