மாருதி சுசூகி 2018 எர்டிகா

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை எர்டிகா மாடலை 2018 ஆம் ஆண்டு இந்தோனேசியா மோட்டார் கட்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் டிசைர், இக்னிஸ், பலேனோ மற்றும் ஸ்விப்ட் மாடல்கள் தயாரிக்கப்பட்ட அதே ஹார்ட்டெக் பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வடிவமைப்பு மற்றும் வசதிகள் என இந்த மாடல் ஏராளமான மாற்றங்களை பெற்றுள்ளது. மேலும் இந்த மாடல் முந்தய மாடலை விட சற்று பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய க்ரில், புதிய பம்பர், புதிய பக்கவாட்டு வடிவமைப்பு, முகப்பு விளக்குகள், புதிய அலாய், புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு என முற்றிலும் ஒரு புதிய மாடல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புற வடிவமைப்பும் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டேரிங் வீல் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் புதிய பிளாட்பாரம், புதிய உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு என முழுவதும் ஒரு புதிய மாடல் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தியாவில் இந்த மாடல் அதே அதே 1.4 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் என்ஜின்  95BHP (6000 RPM) திறனும்  130NM (4000RPM) டார்க் எனும்  இழுவைதிறனும்  டீசல்  என்ஜின்  90BHP (4000 RPM) திறனும் 200NM (1750RPM) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்தியாவில் இந்த மாடல் கூடுதல் வசதிகளுடன் இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.