இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் 3- வது ஷோரூமை சென்னையில் தொடங்கியது.

போலாரிஸ் இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியன் மோட்டார்சைக்கிளின் 3- வது ஷோரூமை சென்னையில் தொடங்கியது.

தென் இந்தியாவில் விற்பனையை அதிகரிக்கவும் மக்களின் ஆதரவை பெருக்கவும் தனது 3- வது ஷோரூமை சென்னையில் தொடங்கியது. உலக தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையை விற்பனைக்கு முன்னும் பின்னும் சிறப்பாக வழங்க திட்டமிட்டுள்ளதாக இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஷோரூம் ஜீ ஜீ யுனிவெர்சல், எண்-2, MC நிக்கோலஸ் சாலை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் என்ற முகவரியில் சென்னையில் அமைந்துள்ளது. 

இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் இந்தியன் ரோடு மாஸ்டர், இந்தியன் சீப் கிளாசிக், இந்தியன் சீப் விண்டேஜ், இந்தியன் சீப்டைன், இந்தியன் சீப் டார்க் ஹார்ஸ் மற்றும் இந்தியன் ஸ்கௌட் ஆகிய மாடலை விற்பனை செய்து வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.