ரூ 1.08 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2019 ஆம் ஆண்டு சுசூகி இன்ட்ரூடர் 150 குரூஸர்

சுசூகி நிறுவனம் தனது ஆரம்ப நிலை குரூஸர் மாடலான இன்ட்ரூடர் 150 மாடலின் 2019 ஆம் ஆண்டு மாடலை ரூ 1.08 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது முந்தய FI எஞ்சின் மாடலை விட ரூ 955 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலின் பிரேக் மற்றும் கியர் லிவர்களின் வடிவமைப்புகள் சிறிது மாற்றப்பட்டுள்ளது. மேலும், புதிய மெட்டாலிக் மேட் டைட்டானியம் சில்வர் வண்ணமும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 154.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் FI என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த என்ஜின் 14.8ps@8000rpm திறனும் 14Nm@6000rpm டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ் மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.