54,740 புதிய அக்சஸ் 125 ஸ்கூட்டர்களை திரும்ப அழைக்கும் சுஸுகி

சுஸுகி நிறுவனம் பின்புற வீல் ஸ்டெபிளிட்டி பிரச்சனை காரணமாக 54,740 புதிய அக்சஸ் 125 ஸ்கூட்டர்களை  திரும்ப அழைக்கிறது. 8 மார்ச் 2016 முதல் 22 ஜூன் 2016 வரை தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர் மாடல்களில் இந்த பிரச்சனை இருப்பதாக சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கென பிரத்தியேக மற்றும் இலவச சேவை முகாமை சுஸுகி நடத்த இருக்கிறது. 

இந்த முகாமில் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு பின்புற ஆக்ஸல் மாற்றித்தரப்படும். இது தொடர்பான தகவலை டீலர்கள் மூலம் சுஸுகி நிறுவனம் வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறது. உங்கள் ஸ்கூட்டரும் இந்த லிஸ்டில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அருகிலே உள்ள டீலர்சிப்பை தொடர்பு கொள்ளுங்கள். 

வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தவும் விபத்துகளை தடுக்கவும் இந்த ஸ்கூட்டர்கள் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.