பஜாஜ் மற்றும் ட்ரியம்ப் நிறுவனங்கள் உலகளவிலான கூட்டணியை அமைத்தது

பஜாஜ் மற்றும் ட்ரியம்ப் நிறுவனங்கள் உலகளவிலான கூட்டணியை அமைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் மிட்-ரேஞ் பைக்குகளை தயாரிக்க உள்ளதாகவும் தெரிகிறது. அதாவது 400cc முதல் 800cc வரை கொள்ளளவு எஞ்சின் கொண்ட பைக்குகளை தயாரிக்க உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை என ஏராளமான தகவல்களை இவ்விரு நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளும்.

ட்ரியம்ப் நிறுவனம் இந்தியாவில் சந்தையை விரிவுபடுத்தவும் அதேபோல் பஜாஜ் நிறுவனம் பல நாடுகளில் புதிதாக கால்பதிக்கவும் இந்த ஒப்பந்தம் பெரிதும் உதவும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.