மிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்களின் விலை விவரங்களை வெளியிட்டது கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் விற்பனையை தொடங்குவதாக ஏற்கனவே  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்படி தற்போது மிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்களின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. மிஸ்ஃபிட் மற்றும் ஏஸ் டீலக்ஸ் மாடல்கள் முறையே ரூ 2.5 லட்சம் மற்றும் ரூ 2.24 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் கிடைக்கும்.

இந்த இரண்டு மாடல்களிலும் 229cc ஏர் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15.4PS @7000rpm திறனையும், 16Nm @6000rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ABS சிஸ்டமும் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல்கள் CKD ரூட் மூலம் சைனாவில் இருந்து இறக்குமதி செய்து அசெம்பிள் செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. கிளீவ்லேண்ட் சைக்கிள் ஒர்க்ஸ் நிறுவனம் தனது முதல் ஷோரூமை மும்பையில் தொடங்க உள்ளது, அதன்பிறகு மேலும் பல நகரங்களில் தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை அடுத்து மற்றொரு அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவு படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனம் ஹார்லி டேவிட்ஸன் போல் பழமையான நிறுவனம் கிடையாது வெறும் ஒன்பது வருடமே ஆனா மிக குறைந்த வயதுடைய ஒரு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டது. உலகளவில் 25 நாடுகளில் இந்த நிறுவனம் மாடல்களை விற்பனையில் செய்கிறது. கிளாசிக் மற்றும் மாடர்ன் என பல வகையான மோட்டார் பைக்குகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.