ரூ 1.18 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய KTM டியூக் 125 ABS

KTM இந்தியா நிறுவனம் டியூக் 125 ABS மாடலை ரூ 1.18 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் இந்தியாவில் உள்ள அணைத்து KTM ஷோரூம்களிலும் தற்போது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை என மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.

KTM டியூக் 200 மாடலில் உள்ள அதே வடிவமைப்பு தான் இந்த மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, புதிய கிராபிக்ஸ் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேம், சஸ்பென்ஷன் என அனைத்தும் KTM டியூக் 200 மாடலில் இருந்து எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் 124.7 cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் லிக்யூட் கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 14.3 bhp @ 9,250 rpm  திறனும் 12 Nm @ 8,000 rpm  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இந்த மாடலில் ஆறு ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் முன்புறத்தில் 300 mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பின்புறத்தில் 230 mm விட்டம் கொண்ட டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சிங்கிள் சேனல் ABS  சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. KTM டியூக் 125 ABS நேரடி போட்டியாக எந்த மாடலும் இந்தியாவில் இல்லை என்றாலும் இந்த மாடல் ஹோண்டா CB ஹார்னெட் 160R, சுசூகி ஜிக்ஸர், யமஹா FZ மற்றும் TVS அப்பாச்சி RTR 160 4V போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.