ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தும் மகிந்திரா

மகிந்திரா நிறுவனம் வரும் டெல்லி வாகன கண்காட்சியில் ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை  காட்சிப்படுத்த இருக்கிறது. அத்துடன் சேர்த்து 2016 மோட்டோ 3 ரேசர் எனும் பைக்கையும் காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த ஜென்சே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதலில் அமெரிக்காவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த ஸ்கூட்டர் ஒருவர் மட்டுமே அமரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறம் பொருள்கள் வைக்கும் பெட்டியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3.5 Kw கொண்ட லிதியம் ஐயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை செல்ல முடியும். 

மேலும் இந்த மாடலில் டச் ஸ்க்ரீன் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலுடன் சேர்த்து மோட்டோ 3 ரேசர், கஸ்டோ மட்டும் மோஜோ போன்ற மாடல்களும் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.