விரைவில் வெஸ்பா GTS300 ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் வெளியிடும் பியாஜ்ஜியோ

வெஸ்பா GTS300 ஸ்கூட்டர் மாடலை இந்த வருட இறுதிக்குள் தோராயமாக ரூ. 4 லட்சம் விலையில் பியாஜ்ஜியோ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ரீமியம் ஸ்கூட்டர் வகையை சார்ந்தது. பியாஜ்ஜியோ நிறுவனம் வெஸ்பா பிராண்டில் 125 cc  மற்றும் 150 cc  என்ஜின் கொண்ட ஸ்கூட்டர்களை ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. வெஸ்பா  ஸ்கூட்டர்கள் தான் இந்தியாவில் 150 cc  என்ஜினுடன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலில் 278cc கொள்ளளவு கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 21.2 Bhp திறனையும் 22.3 Nm  இலுவைதிரனையும் வழங்கும். இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 128 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. நிலைதன்மைக்காக இந்த மாடல் முழுவதும் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் ABS, டிராக்சன் கண்ட்ரோல் போன்ற ஏராளமான வசதிகள் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் போது இது தான் அதிக விலை மற்றும் செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடலாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.