வெளியிடப்பட்டது ஸ்கூட்டி செஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் சிறப்பு பதிப்பு

சென்னையை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம்  ஸ்கூட்டி செஸ்ட் ஹிமாலயன் ஹைஸ் எனும் சிறப்பு பதிப்பு மாடலை ரூ.48561 சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு  செப்டம்பர் மாதம் தொழில் முறை பைக் ஓட்டுனரான அனம் ஹசிம் எனும் பெண் ஸ்கூட்டி செஸ்ட் மூலம் உலகின் உயரமான பகுதிகளில் ஒன்றான கார்டுங்லா எனும் பகுதிக்கு சென்றார். 110 cc  ஸ்கூட்டர் மூலம் கார்டுங்லா பகுதிக்கு சென்ற முதல் நபர் இவர்தான். எனவே இவரை பெருமை படுத்தும் விதமாக இந்த சிறப்பு பதிப்பு மாடலை வெளியிட்டுள்ளது டிவிஎஸ் நிறுவனம். 

இந்த மாடல் சாதாரண மாடலை விட ரூ.600 அதிகம் விலை கொண்டது. பிரவுன் வண்ண பெயிண்ட், இரட்டை வண்ண இருக்கை, ஓக் வண்ண பேணல் மற்றும் சிறப்பு பதிப்பு எம்பலம் ஆகியவை இந்த மாடலில் கூடுதலாக கிடைக்கும்.

இந்த மாடலில் 109.7 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் பெட்ரோல் என்ஜின்  7.9 bhp (7500 rpm) திறனும்  8.7 Nm (5500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இந்த மாடல் 62 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த மாடல் அதிக பட்சமாக 75 முதல் 80 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.