ரூ. 10.9 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது ட்ரியம்ப் த்ரக்ஷ்டன் R

ட்ரியம்ப் நிறுவனம் த்ரக்ஷ்டன் R மோட்டார் பைக்கை ரூ. 10.9 லட்சம் டெல்லி ஷோரூம்  விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மாடர்ன் கிளாசிக் தத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாடர்ன் கிளாசிக் என்பது பழமையான வடிவத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வடிவமைப்பது. ட்ரியம்ப் நிறுவனம் போன்விள்ளே T120, போன்விள்ளே T100, ஸ்ட்ரீட் ட்வின் மற்றும்  த்ரக்ஷ்டன் ஆகிய மாடல்களை  மாடர்ன் கிளாசிக் தத்பரியத்தில் தான் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பழமையான வடிவமைப்பை விரும்புவோருக்கு இந்த மாடல்கள் சிறந்த தேர்வாக இருக்கும். 

இந்த மாடலில் 1200 சக் கொள்ளளவு கொண்ட பேரலல் ட்வின் எஞ்சீன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 97 Bhp  திறனையும் 112 Nm  இழுவைதிறனையும் வழங்கும். முந்தய தலைமுறை என்ஜினுடன் ஒப்பிடும் பொது 61% கூடுதல் இழுவைதிறனையும் 41% கூடுதல் திறனையும் வழங்கும். 

இந்த மாடல் ABS, என்ஜின் இம்மொபிளைசர், டிராக்சன் கன்ட்ரோல், ட்ரிவிங் மோட் மற்றும் USB  சாக்கெட்   என ஏராளமான தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இந்த மாடலுக்கு 160 விதமான கூடுதல் உபகரணங்களும் டிராக் ரேசர் கிட் மற்றும் கேப் ரேசர் கிட் என இரண்டு கிட்களும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.