விரைவில் சென்னையில் வெளியிடப்படும் எதர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பெங்களூரை சேர்ந்த எதர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை கடந்த ஆண்டு பெங்களூருவில் வெளியிட்டது. தற்போது, இந்த மாடல்கள் வரும் ஜூன் மாதம் சென்னையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலையிலும் சிறிது மாற்றம் இருக்கும். இந்த நிறுவனம்  எதர் 340 மற்றும் 450 என இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு மாடல்கள் தான் சென்னையிலும் வெளியிடப்படும். 

இந்த மாடலில் 7 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் நேவிகேசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதை மொபைல் போனுடன் இணைத்து கொள்ள முடியம். இந்த மாடலில் லிதியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு மணி நேரத்திற்குள் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். இந்த பேட்டரி 50000 கிலோமீட்டர் வரை உழைக்கும்.

எதர் 340 வேரியன்ட் மாடல் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகம் வரையும் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்தை 5.1 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் உள்ள பேட்டரி 60 கிலோமீட்டர் ரேஞ் கொண்டது. அதேபோல், எதர் 450 வேரியன்ட் மாடல் அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகம் வரையும் மற்றும் 40 கிலோமீட்டர் வேகத்தை 3.9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. மேலும் இந்த மாடலில் உள்ள பேட்டரி 75 கிலோமீட்டர் ரேஞ் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.