750 CC ட்வின் சிலிண்டர் என்ஜினை சோதனை செய்து வரும் ராயல் என்பீல்ட்

ராயல் என்பீல்ட் நிறுவனம் புதிய 750 CC பேரளல் ட்வின் சிலிண்டர் என்ஜினை சோதனை செய்து வருவது என்கனவே அறிந்த செய்தி. ஆனால் தற்போது புதிய 750 CC பேரளல் ட்வின் சிலிண்டர்  பொருத்தப்பட்ட கான்டினென்டல் GT  மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. அந்த சோதனை ஓட்ட படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த புதிய 750 CC பேரளல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் தோராயமாக 50 Bhp திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்த என்ஜினை கான்டினென்டல் GT  மாடலில் பொருத்திய சோதனை செய்து வருகிறது. ஆனால் அதே மாடல்  750 CC எஞ்சினுடன் வெளியிடப்படும் என்பது தெரிய வில்லை. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.