மகிந்திரா நிறுவனம் ஜூலை 30 அன்று U301 என்ற மாடலை முதல் முறையாக காட்சிப்படுத்துகிறது

மகிந்திரா நிறுவனம் ஜூலை 30 அன்று U 301 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் SUV  மாடலை காட்சிப்படுத்த இருக்கிறது. இந்த மாடல் முற்றிலுமாக புதிய வடிவில வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பொலிரோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கபட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் இந்த மாடலின் பெயர், வெளியிடப்படும் தேதி மற்றும் பிற தொழில்நுட்ப விவரங்கள் ஆகியவை ஜூலை 30 அன்று அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் இந்தியாவில் பல இடங்களில் சமீப காலமாக சோதனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்தது. மேலும் இந்த மொடல் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள மௌவல் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.