மகிந்திரா ஸ்கார்பியோவின் ஆட்டோமேடிக் மாடல் 13.24 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது

 மகிந்திரா நிறுவனம் இந்தியாவின் சிறந்த SUV யான ஸ்கார்பியோவின் ஆட்டோமேடிக் மாடலை வெளியிட்டது. S10 வேரியண்டின் 2 மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு மாடலில் மட்டும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் கிடைக்கும். இது தான் இந்தியாவிலே குறைந்த விலையில் கிடைக்கும் ஆட்டோமேடிக் SUV என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஆட்டோமேடிக் மாடல் 2.2 லிட்டர் mHawk டீசல் என்ஜினில் கிடைக்கும். இது 120 bhp (4000 rpm) திறனும் 280Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

மகிந்திரா ஸ்கார்பியோவின் ஆட்டோமேடிக் மாடல் மற்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியையும் மேலும் சிறந்த செயல்திறனையும் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்திரா ஸ்கார்பியோவின் ஆட்டோமேடிக் மாடலின் விலை விவரம்:
மகிந்திரா ஸ்கார்பியோ - S10 ஆட்டோமேடிக்  - ரூ. 13,24,871
மகிந்திரா ஸ்கார்பியோ - S10 4WD ஆட்டோமேடிக் - ரூ. 14,47,384

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.