2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்டை அறிமுகப்படுத்தியது யமஹா

இரண்டு சக்கர வாகன தயாரிப்பில் பெயர் பெற்ற நிறுவனமான யமஹா சிறிய ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்டை2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது. யமஹா நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்க தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்த மாடலில் இரண்டு பேர் மட்டுமே அமர முடியும். மேலும் இந்த மாடல் 3900 மில்லி மீட்டர்  நீளமும் 1720 மில்லி மீட்டர் அகலமும் 1170 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது. மேலும் இந்த கார் வெறும் 750 கிலோ கிராம் எடை மட்டுமே கொண்டது. 

இந்த மாடலின் முன்புறம் பார்பதற்கு யமஹாவின் YZF மாடலின் முன்புற இரட்டை முகப்பு விளக்கு போலவே உள்ளது. முன்புறத்தில் LED முகப்பு விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் நடுவே ஒரே ஒரு புகை போக்கி மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் தொடர்பாக எந்த ஒரு தகவலையும் யமஹா நிறுவனம் வெளியிடவில்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.