ரூ.49.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது 2016 ஆம் ஆண்டு ஜாகுவார் XF

ஜாகுவார் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2016 ஆம் ஆண்டு XF  மாடலை ரூ.49.5 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் மொத்தம் பியூர், ப்ரெஸ்டீஜ் மற்றும் போர்ட்போலியோ என மூன்று வேரியண்டுகளில்   கிடைக்கும்.

புதிய 2016 ஆம் ஆண்டு XF  மாடலில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. முன்புறத்தில் மட்டும் சிறிய மாற்றங்களும் புதிய LED விளக்குகளும்  கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மற்றபடி ஜாகுவார் நிறுவனத்தின் அனைத்து சிறப்பு  அம்சங்களையும் இந்த மாடல் கொண்டுள்ளது.

இந்த மாடலில்  2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டீசல் என்ஜின் ஜாகுவார் நிறுவனத்தின் புதிய இன்ஜெனியம் என்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.  இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 240 bhp  திறனும் 340Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 180 bhp திறனும் 430Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. முந்தய மாடலில் உள்ளது போல் 3.0 லிட்டர் தீசன் மற்றும் 5.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களில் வெளியிடப்படவில்லை. இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ், BMW  5 சீரீஸ், வோல்வோ S90 மற்றும் ஆடி A6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.