வெளிப்படுத்தப்பட்டது 2019 ஆம் ஆண்டு ஜீப் செரோக்கீ

ஜீப் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு செரோக்கீ மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் 2018 ஆம் ஆண்டு டெட்ராய்ட் மோட்டார் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மேலும் சில புதிய எஞ்சின் ஆப்சன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் முன்புறம் மற்றும் பின்புத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தை காட்டிலும் பின்புறத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் கிராண்ட் செரோக்கீ போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சில புதிய உபகரணங்களை எதிர்பார்க்கலாம். எஞ்சின் தொடர்பான விவரங்களும் வெளியிடப்படவில்லை. எனினும் சில புதிய எஞ்சின் ஆப்ஷன்களையும் எதிர்பார்க்கலாம். மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.