ரூ.4.79 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2019 மாருதி சுசூகி இக்னிஸ்

மாருதி சுசூகி நிறுவனம் ரூ.4.7 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு இக்னிஸ் மினி SUV மாடலை வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் பின்புற பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை ஸ்பீட் அலர்ட் மற்றும் ரூப் ரயில் ஆகியவை கூடுதல் அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்புகளில் எந்த மாற்றமும் இல்லை. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்:
MT

  • சிக்மா பெட்ரோல்  -ரூ.4.79 லட்சம் 
  • டெல்டா பெட்ரோல் -ரூ.5.40 லட்சம் 
  • ஸிட்டா பெட்ரோல்  -ரூ.5.82 லட்சம் 
  • ஆல்பா பெட்ரோல்  -ரூ.6.67 லட்சம் 

AMT

  • டெல்டா AMT பெட்ரோல்  -ரூ.5.87 லட்சம் 
  • ஸிட்டா AMT பெட்ரோல்  -ரூ.6.29 லட்சம் 
  • ஆல்பா AMT பெட்ரோல்  -ரூ.7.14 லட்சம் 

இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த என்ஜின்  83 bhp திறனையும் 113 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும். மேலும் இந்த மாடல் 20.89 கிலோமீட்டர் மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இந்த மாடலில் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED  விளக்குகள், 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் டின்சல் ப்ளூ, க்ரே, அர்பன் ப்ளூ, வெள்ளை, சில்வர், சிவப்பு, வெள்ளை & டின்சல் ப்ளூ, கருப்பு & டின்சல் ப்ளூ மற்றும் கருப்பு & சிவப்பு என ஒன்பது வண்ணங்களில் கிடைக்கும். 
 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.