ரூ.12.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய 2019 டாடா ஹெக்சா

டாடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டு ஹெக்சா SUV மாடலை ரூ.12.99 லட்சம் சென்னை ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, மற்றபடி வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வெறியன்ட் வாரியாக இதன் சென்னை ஷோரூம் விலை விவரம்:

  • XE 4x2 MT -ரூ. 12.99 லட்சம் 
  • XM 4x2 MT -ரூ. 14.21 லட்சம்
  • XM+ 4x2 MT -ரூ. 15.29 லட்சம்
  • XMA 4x2 AT -ரூ. 15.43 லட்சம்
  • XT 4x2 MT -ரூ. 16.96 லட்சம்
  • XTA 4x2 AT -ரூ. 18.10 லட்சம்
  • XT 4x4 MT -ரூ. 18.27 லட்சம்

இந்த மாடலில் புதிய இரட்டை வண்ணம், புதிய அலாய் வீல் மற்றும் புதிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் பார்க்கிங் சென்சார், சூப்பர் டிரைவ் மோட், ஹில் கிளைம்ப் கண்ட்ரோல் என ஏராளமான வசதிகள் கிடைக்கும். எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 2.2 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இது இரண்டு விதமான செயல்திறன்களில் கிடைக்கிறது. XE வேரியண்டில் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் மற்ற வேரியண்ட்டுகளில் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் இதில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோடு எனும் நான்கு டிரைவ் மோடுகளும் உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.