வெளிப்படுத்தப்பட்டது அபார்த் 124 ஸ்பைடர்

ஃபியட் நிறுவனம்   அபார்த் 124 ஸ்பைடர் மாடலை  ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமகம் செய்தது. இது ஃபியட் 124 ஸ்பைடர் மாடலின் அபார்த் வெர்சன் ஆகும். இந்த  அபார்த் 124 ஸ்பைடர் மாடலில் என்ஜினில் மட்டும் அல்லாமல் தோற்றத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஸ்போர்டியாக தெரிய புதிய பம்பர்கள் பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதே 1.4 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் இது அதிகபட்சமாக 170 bhp திறனையும் 250 Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த மாடல் 100 கிலோ மீட்டர்  வேகத்தை 6.8 வினாடிகளில் கடக்கும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. இந்த மாடல் 6 ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் கிடைக்கும். 

ஃபியட் 124 ஸ்பைடர்  மாடலே இதுவரை இந்தியாவில் வெளியிடப்படவில்லை. எனவே இந்த அபார்த் 124 ஸ்பைடர் மாடல் இந்தியாவில் வெளியிடப்படும என்பது சந்தேகமே.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.