வெளிப்படுத்தப்பட்டது ஆஸ்டன் மார்டின் DBS சூப்பர்லெகேரா

இத்தாலியை சேர்ந்த ஆஸ்டன் மார்டின் நிறுவனம் DBS சூப்பர்லெகேரா மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் வேன்குவிஷ் மாடலுக்கு மாற்றாக நிலைநிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் தத்பரியத்தில் தான் இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலிலும் அதே 5.2 லிட்டர் டர்போ சார்ஜ் V12 எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 715 Bhp திறனையும் 900Nm இழுவைத்திறனையும் வழங்கும் வல்லமை கொண்டது. இந்த மாடலில் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 100kmph வேகத்தை 3.4 வினாடிகளில் 160kmph வேகத்தை 6.4 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடல் அதிகபட்சமாக 340kmph வேகம் வரை செல்லும் மேலும் இது எலெக்ட்ரானிக்கல் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

உட்புற வசதிகள் எவ்வாறு இருக்கும் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை, இந்த மாடலில் உட்புறம் வெளிப்புறம் என ஏராளமான சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான செயல்திறனை வழங்க இந்த மாடலின் எடை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.