சிவிட், அதோர் மற்றும் டியாகோ இவேற்றில் ஒன்று தான் டாடா சீக்காவின் புதிய பெயர்

சிகா வைரஸ் காரணமாக சீக்காவின் மாடலின் பெயர் மாற்றப்படும் என ஏற்கனவே டாடா நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக வாடிக்கையாளர்களும் தங்களுக்கு பிடித்த பெயரை பரிந்துரை செய்யலாம் என சமூக வலை தளங்களை தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது சிவிட், அதோர் மற்றும் டியாகோ எனும் மூன்று பெயரை இறுதி செய்துள்ளது. மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி இவற்றில் ஒரு பெயர் முடிவு உறுதி செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்களும் வாக்களிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும். Tata Zica

பழைய மாடல்களின் தூங்கி வழிந்த வடிவத்திலிருந்து முன்புறம், பக்கவாட்டுப்பகுதி மற்றும் பின்புறம் என சீக்கா (ZICA)  மாடலின் வடிவத்தை சற்று சிறப்பாகவே வடிவமைத்துள்ளது டாடா நிறுவனம். ஆரம்ப நிலை மாடல் என்றாலும் பார்பதற்கு சற்று பெரிதாகவே தோற்றமளிக்கிறது.

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல்என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.0 லிட்டர் என்ஜின் டாடா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm  இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க்  டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm  இலுவைதிரனையும் வழங்கும்.  இந்த மாடல் மாருதி செளிரியோ, செவ்ரொலெட் பீட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். மேலும் இந்த மாடல் இண்டிகா  மற்றும் இண்டிகோ மாடல்களுக்கு மாற்றாக இருக்கும் எனவே எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.