டெலிவெரி செய்ய வேண்டாம் என டீலர்களிடம் கூறியதற்கு ஹேன்ட் ப்ரேக் பிரச்சனையே காரணம் - வோல்க்ஸ் வேகன்

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் போலோ மாடலை டெலிவெரி செய்ய வேண்டாம் என டீலர்களிடம் கூறியது அதற்க்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஹேன்ட் ப்ரேக் பிரச்சனை காரணமாகவே அவ்வாறு கூறியுள்ளது. 2015 ஆண்டு செப்டேம்பர்  மாதம் ஒரு யூனிட்டில் தயாரிக்கப்பட்ட 389 கார்களில் இந்த பிரச்சனை இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த 389 கார்களையும் திரும்ப அழைத்துள்ளது வோல்க்ஸ் வேகன் நிறுவனம். ஒரு சில நிலைகளில்  ஹேன்ட் ப்ரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக வோல்க்ஸ் வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பிரச்சனை உள்ள கார்களின் வடிக்கயாளர்களுக்கு தொடர்பு கொண்டு  ஹேன்ட் ப்ரேக் பிரச்சனை விரைவில் சரி செய்து கொடுக்கப்படும் எனவும் வோல்க்ஸ் வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.