ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: ஜகுவார் F - பேஸ் காட்சிப்படுத்தப்பட்டது

இறுதியாக ஜகுவார் நிறுவனம் F - பேஸ் SUV மாடலின் விவரங்களை   ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிட்டது.  இதன் கான்செப்ட் மாடல் மூன்று வருடங்களுக்கு முன்னால் வெளியிடப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல், பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு விதமான திறன் என நன்கு விதமான என்ஜின் ஆப்சன்களில் கிடைக்கும். இதன் அனைத்து மாடல்களும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும். இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 180 bhp  திறனையும், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 240 bhp  திறனையும், 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 340 bhp  திறனையும் மற்றும் 380 bhp  திறனையும் வழங்கும். 

இந்த மாடல் இலகு எடை கொண்ட அலுமினியத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மிக சிறப்பான கையாளுமையையும், சொகுசான பயண அனுபவத்தையும் தரும் என ஜகுவார் நிறுவனம் கூறியுள்ளது. இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளதால் கரடு முரடான சாலைகளிலும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறியுள்ளது.

இந்த மாடல் வெளிவந்த பிறகு SUV மாடல்களிலேயே இதுதான் சிறப்பான பயண அனுபவத்தை தரும் மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.