90,210 டீசல் சிட்டி மற்றும் மொபிலியோ கார்களை திரும்ப அழைக்கிறது ஹோண்டா

ஹோண்டா இந்தியா நிறுவனம் எரிபொருள் பைப்பில் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணாமாக மொத்தம் 90,210 டீசல் சிட்டி மற்றும் மொபிலியோ கார்களை திரும்ப அழைக்கிறது. டிசம்பர் 2013 முதல் ஜூலை 2015 வரை தயாரிக்கப்பட்ட 64,428 சிட்டி கார்களிலும் ஜூன் 2014 முதல் ஜூலை 2015 வரை தயாரிக்கப்பட்ட 25,782 மொபிலியோ கார்களிலும் இந்த பிரச்னை இருப்பதாக ஹோண்டா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கார்களில் எரிபொருள் பைப்பில் பிரச்சனை இருப்பதால் எரிபொருள் கசியும் வாய்ப்பு அதிகாமாக இருக்கும் எனவே இந்த கார்களில் உள்ள இந்த பிரச்சனை இலவசமாக அனைத்து ஷோ ரூம்களிலும் சரி செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமது கார்களில் பிரச்சனை உள்ளதா என்பதை  ஹோண்டா இணையத்தில் காரின் 17 இலக்க VIN என்னை வைத்து அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இலவச சர்வீஸ் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் அனைத்து ஷோரூம்களிலும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.