இந்தியாவில் வெளிப்படுத்தப்பட்டது ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV

ஹூண்டாய் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வென்யூ காம்பேக்ட் SUV மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த மாடல் மே 21 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த மாடல் டாடா நெக்ஸன், மாருதி சுசூகி விட்டாரா ப்ரீசா, போர்டு ஈக்கோ ஸ்போர்ட், மஹிந்திரா XUV300 மற்றும் TUV300 போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹூண்டாய் வென்யூ மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் கோனா மற்றும் க்ரெட்டா போன்ற மாடல்களின் வடிவமைப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சட்டென்று பார்ப்பதற்கு க்ரெட்டா மாடல் போல தான் இந்த மாடல் தோற்றமளிக்கிறது. இந்த மாடலில் 16-இன்ச் அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ப்ரொஜெக்டர்  பனி விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், LED பின்புற விளக்குகள், புதிய கேஸ்கெட் கிரில் மற்றும் சன் ரூப் என மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு காற்றுப்பை, EBD உடன் கூடிய ABS, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மேண்ட் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் என ஏராளமான சொகுசு வசதிகளும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய BlueLink Connected Car தொழில்நுட்பத்துடன் கூடிய 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிஸ்டம் 33 வகையான வசதிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹூண்டாய் வென்யூ மாடல் 3995mm நீளமும், 1770mm அகலமும், 1590mm உயரமும் மற்றும் 2500mm வீல் பேசும் கொண்டது. இந்த மாடல் 1.0-லிட்டர் டர்போ, 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4-லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 118bhp திறனும் மற்றும் 172Nm இழுவைத்திறனும், 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 83bhp திறனும் மற்றும் 115Nm இழுவைத்திறனும் மற்றும் 1.4-லிட்டர் டீசல் எஞ்சின் 90bhp திறனும் மற்றும் 220Nm இழுவைத்திறனும் கொண்டது. மேலும், 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல் மற்றும் ஏழு ஸ்பீட் டியூவல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷனிலும், 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஐந்து ஸ்பீட் மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் மற்றும் 1.4-லிட்டர் டீசல் எஞ்சின் ஆறு ஸ்பீட் மேனுவல்  ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும். இந்த மாடல் ரூ 8 லட்சம் முதல் ரூ 12 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.