அடுத்த தலைமுறை தார் மாடலை தயாரிக்கும் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனம் அடுத்த தலைமுறை தார் மாடலை தயாரிக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகச்சிறந்த ஆப் ரோடு மாடல்களில் தார் மாடலும் ஒன்று. இந்த மாடல் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது அதன் பிறகு இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தற்போது இதன் அடுத்த தலைமுறை மாடலை தயாரிக்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடலில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், வயர் லெஸ் மொபைல் சார்ஜிங் சிஸ்டம் மற்றும் எதிர்கால டிரைவிங் தொழில்நுட்பம் என ஏராளமான வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது இந்த மாடல் 2.5 லிட்டர் டீசல் என்ஜினில் CRDe மற்றும் DI என இரண்டு விதங்களில் கிடைக்கிறது. DI டீசல் என்ஜின் மாடல் 63 bhp  திறனும் 182.5Nm (1500-1800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  அதே போல் CRDe டீசல் என்ஜின் மாடல் 105 bhp (3800 rpm) திறனும் 247Nm (1800-2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த இரண்டு மாடலுமே இரண்டு மற்றும் நான்கு வீல் டிரைவ்களில் கிடைக்கும்.  இந்த மாடல் அடுத்த வருடம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.