1.9 லிட்டர் டீசல் என்ஜின்களை கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை விரைவில் வெளியிடும் மகிந்திரா

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் 2 லிட்டர் அல்லது அதற்கு மேல் கொள்ளளவு கொண்ட டீசல் என்ஜின் கார்களுக்கு ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை மூன்று மாதங்களுக்கு டெல்லியில் தடை விதித்தது. இதனால் மகிந்திராவின் விற்பனை 2 சதவீதம் வரை பாதிக்கப்படும் என ஏற்கனவே மகிந்திரா நிறுவனம் தெரிவித்திருந்தது. எனவே விற்பனையை சரி செய்ய பெட்ரோல் என்ஜின் கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை வெளியிட இருந்தது. ஆனால் தற்போது 1.9 லிட்டர் டீசல் என்ஜின்களை கொண்ட ஸ்கார்பியோ மற்றும் XUV 500 மாடல்களை விரைவில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.

ஒரு சில வாரங்களிலேயே இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 1.9 லிட்டர் என்ஜின் தற்போது இருக்கும் 2.2 லிட்டர்  mHawk என்ஜினின் அடிப்படையில் உருவாக்கப்படும். எனினும் மகிந்திரா நிறுவனம் எதிர்காலங்களில் பெட்ரோல் என்ஜினில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.