ரூ.6.25 லட்சம் விலையில் மகிந்திரா இம்பெரியோ பிக் அப் ட்ரக் மாடல் வெளியிடப்பட்டது

மகிந்திரா நிறுவனம் ரூ.6.25 லட்சம் தானே ஷோ ரூம்  விலையில்  இம்பெரியோ பிக் அப் ட்ரக் மாடலை வெளியிட்டுள்ளது. இது ஜெனியோ மாடலின் மேம்படுத்தப்பட்ட மற்றும் சைலோ அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  வெளிப்புறம் சதுர முகப்பு விளக்குகள், சில்வர் நிற முன்புற கிரில் என அழகாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

உட்புறம் அப்படியே  சைலோ  மாடல் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு வரிசை இருக்கை கொண்ட கேபின் மற்றும் இரண்டு வரிசை இருக்கை கொண்ட கேபின் என இரண்டு விதங்களிலும் கிடைக்கும். மேலும் டாப் வேரியண்டில் குளிரூட்டி,  பவர் விண்டோ, ஆடியோ சிஸ்டம் மற்றும் என்ஜின் இம்மொபிளைசர் ஆகியவை கிடைக்கும்.

இந்த மாடலில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இது 75 Bhp திறனையும் 220 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதில் 5 ஸ்பீட் கொண்ட மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். மேலும் இந்த மாடல் 211 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.