முதல் ஷோ ரூமை டெல்லியில் தொடங்கியது மசராட்டி

இத்தாலியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான  மசராட்டி மீண்டும் இந்தியாவில் தனது இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாக சில நாட்களுக்கு முன்பு தான் அறிவித்திருந்தது. இந்நிலையில் முதல் ஷோ ரூமை இன்று டெல்லியில் தொடங்கியது மசராட்டி நிறுவனம். AMP  சூப்பர் கார் நிறுவனத்துடன் சேர்ந்து இந்த ஷோ ரூமை மசராட்டி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த ஷோ ரூம் மதுரா ரோட்டில் அமைந்துள்ளது. 

உலகத்தரத்தில் இந்த ஷோ ரூம் வடிவமைக்கப்படுள்ளதாகவும் மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும் என மசராட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த ஷோ ரூமில் கிப்ளி , குவாட்ரோபோர்ட் டீசல், க்ரன் டூரிஸ்மோ, க்ரன் கேப்ரியோ மற்றும் குவாட்ரோபோர்ட் GTS ஆகிய 5 கார்கள் கிடைக்கும்.

மசராட்டி கார்களின் தோராயமான விலை:-
மசராட்டி கிப்ளி  - ரூ.1.1 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் டீசல் - ரூ.1.5 கோடி 

மசராட்டி க்ரன் டூரிஸ்மோ - ரூ.1.8 கோடி 

மசராட்டி க்ரன் கேப்ரியோ - ரூ.2.0 கோடி 

மசராட்டி குவாட்ரோபோர்ட் GTS - ரூ.2.2 கோடி 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.