மெர்சிடிஸ் பென்ஸ் - AMG GT S

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் AMG GT S மாடலை நவம்பர் 24 அன்று வெளியிட இருக்கிறது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 12 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்டிருப்பது க்ரிப்பிடதக்கது. மேலும் இந்த AMG GT S மாடல் AMG பிரண்டின் ஐந்தாவது மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 4 லிட்டர் ட்வின் டர்போ V 8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  503 bhp திறனை வழங்கும். இந்த மாடல் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட டியுவல் க்ளட்ச் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மாடல் ரோடு ஸ்டார் மாடல் வகையை சார்ந்தது. மேலும் இந்த மாடலில் இரண்டு பேர் மட்டுமே அமர முடியும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.