புதிய நிசான் கிராஸ் ஓவர் மாடல் கான்செப்டின் பெயர் கிரிப்ஸ்

நிசான் நிறுவனம் புத்தம் புதிய கிராஸ் ஓவர்  மாடல்  கான்செப்டின் இரண்டாவது டீசரை வெளியிட்டது. மேலும் அதன் பெயரை கிரிப்ஸ் எனவும் அறிவித்துள்ளது. இந்த மாடலை  ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்துவதாக இருக்கிறது. நிசான் நிறுவனம் வெளியிட்டுள்ள படத்தில் V வடிவிலான முன்புற கிரில்லும் LED முகப்பு விளக்கும் மட்டும் தெரிகிறது.

இந்த மாடல் நிசானின் Z பிராண்டில் வெளியிடப்படும். எனவே இந்த மாடல் Z சீரீஸ் மாடலின் கிராஸ் ஓவர் மாடலாக இருக்கும். பெரும்பாலும் Z சீரீஸ் மாடல்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே  வெளியடப்படும். அனால் இந்த மாடல் அவ்வாறு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது  Z பிராண்டில் வெளியிடப்படும் முதல் ஹேட்ச் பேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த காரின் டீசரை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=3TthFMKXB28&feature=youtu.be

மேலும் இந்த காரின் மற்ற விவரங்களை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.