முன்கூட்டியே வெளியிடப்படும் அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மற்றும் டிசைர்

மாருதி சுசுகி நிறுவனம் அடுத்த தலைமுறை ஸ்விப்ட் மற்றும் டிசைர் மாடல்களை 2018 ஆம் ஆண்டு வெளியிடுவதாக இருந்தது அனால் தற்போது 2017 ஆம் ஆண்டே வெளியிடுவதற்காக அதற்கான வேலைகளை துரிதப்படுதியுள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மற்றும் டிசைர் மாடல்கள் பலேனோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படும். மேலும் இந்த மாடல்  தற்போது இருக்கும் மாடலை விட எடை குறைவாகவும் அதிக செயல்திறன் கொண்டதாகவும்  இருக்கும். மேலும் என்ஜினில் அதிக மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த அடுத்த தலைமுறை மாருதி சுசுகி ஸ்விப்ட் மற்றும் டிசைர் மாடல்கள் அடுத்த ஆண்டு இறுதிக்கும் அறிமுகம் செய்யப்படும் அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.