ரூ. 9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட நிசான் டெர்ரானோ

நிசான் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டெர்ரானோ SUV  மாடலை ரூ. 9.99 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையில் மாற்றம் இல்லை முந்தய மாடலின் விலையில் தான் கிடைக்கிறது. மேலும் இந்த மாடலில் 22 புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளிப்புறத்தில் குரோம் அலங்காரங்களுடன் கூடிய பனி விளக்குகள், புதிய வடிவத்திலான முகப்பு கிரில், L வடிவ பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், புதிய எலெக்ட்ரிக் பக்கவாட்டு கண்ணாடிகள்  மற்றும் புதிய வண்ணம் ஆகியவையும் உட்புறத்தில் கருப்பு - பிரவுன் வான கலவையில் 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், புதிய ஸ்டேரிங் வீல், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆர்ம் ரெஸ்டில் ஆடியோ கட்டுப்பாடு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும்  1.5 லிட்டர்  லிட்டர்  டீசல்  என்ஜினில் தான் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின்   மாடல் 104 bhp (5850 rpm) திறனும் 145Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் எஞ்சின் இரண்டு வித திறன்களில் கிடைக்கும். குறைந்த திறன் கொண்ட எஞ்சின் 85 bhp (3750 rpm) திறனும் 200Nm (1900rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. அதிக திறன் டீசல் என்ஜின்  மாடல் 110 bhp (3900 rpm) திறனும் 248Nm (2250rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் கிரெடா மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.