ஆல்பின் விசன் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது ரெனால்ட்

ரெனால்ட் நிறுவனம் ஆல்பின் விசன் எனும் ஸ்போர்ட்ஸ் கார் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலை ஜெனிவா மோட்டார் கண்காட்சியிலும் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் ஆல்பின் பிரான்டிலேயே  வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்பின் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் 1950 மற்றும் 60 களில்   மிகவும் புகழ் பெற்ற விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் ஆல்பின் நிறுவனத்தின் A110 மாடலின் அடிப்படையில் புதிய தலைமுறைக்கு ஏற்றவாறு அம்சங்களை சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 1.8 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 250Bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடல் பின்புற வில் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.