புதிய பிரௌன் வண்ணத்தில் வெளியிடப்படும் டாடா ஹெக்சா

டாடா நிறுவனம் விரைவில் புதிய பிரௌன் வண்ணத்தில் ஹெக்சா மாடலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு சில படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வண்ணம் ஹெக்சா மாடலின் விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும்.

ஹெக்சா மாடல் ஏற்கனவே அரிஜன் ப்ளூ, பிளாட்டினம் சில்வர், பேர்ல் வெள்ளை, சில்வர் மற்றும் ஸ்கை கிரே என ஐந்து வண்ணங்களில் வெளியிடப்படுகிறது.  இந்த மாடல் டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் எனும் வடிவமைப்பின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 4788மிமீ நீளமும் 1903மிமீ அகலமும் 1791மிமீ உயரமும் கொண்டது. மற்றும் 200 மிமீ  கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இந்த மாடலில்  2.2 லிட்டர் டீசல் என்ஜினில் பொருத்தப்பட்டுள்ளது. இது இரண்டு விதமான செயல்திறன்களில் கிடைக்கிறது. XE வேரியண்டில் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் மற்ற வேரியண்ட்டுகளில் 156 Bhp திறனையும் 400 Nm இழுவைதிறனையும் வழங்கும் என்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸிலும் கிடைக்கும். இந்த மாடல் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும் இதில் ஆட்டோ, கம்போர்ட், டைனமிக் மற்றும் ரப் ரோடு எனும் நான்கு டிரைவ் மோடுகளும் உள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.