அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டது புத்தம் புதிய ஹூண்டாய் சேன்ட்ரோ

ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய சேன்ட்ரோ மாடலை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் முன்பதிவு நேற்று முதல் தொடங்கப்பட்டது. இந்த மாடலை ரூ 11,100 முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த மாடல் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என பிரத்தியேக போட்டியை ஹூண்டாய் நிறுவனம் நடத்தி, அதன் மூலம் சேன்ட்ரோ எனும் பெயரை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் ஹூண்டாய் கிராண்ட் i10 மாடல் தயாரிக்கப்பட்டுள்ள அதே HA பிளாட்பார்மில் தாள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் இந்த மாடலில் காற்றுப்பை, ABS மற்றும் EBD போன்ற பாதுகாப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் 4-சிலிண்டர் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் AMT தேர்விலும் CNG தேர்விலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை எனினும் 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் வெளியிடப்பட்டால் மாருதி சுசூகி செலிரியோ, டாடா டியாகோ, ரெனோ க்விட் மற்றும் மாருதி சுசூகி வேகன் R போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.