புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் கிடைக்கும் வோல்க்ஸ்வேகன் அமியோ பேஸ்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் அமியோ பேஸ் காம்பேக்ட் செடான் மாடலை ரூ 6.1 லட்சம் ஷோரூம் விலையில்  வெளியிட்டுள்ளது. இந்த புதிய 1.0 லிட்டர் MPI பெட்ரோல் எஞ்சின் முந்தய 1.2 லிட்டர் MPI எஞ்சினுக்கு மாற்றாக வெளியிடப்பட்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய போலோ பேஸ் மாடலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அப்போதே அமியோ மாடலும் விரைவில் 1.0 லிட்டர்  எஞ்சினுடன் வெளியிடப்படும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த புதிய 1.0 லிட்டர் MPI பெட்ரோல் என்ஜின் 76Bhp திறனையும் 95Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த என்ஜின் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய 1.0 லிட்டர் MPI பெட்ரோல் என்ஜின் முந்தய எஞ்சினை விட 1Bhp அதிக திறனும் 15Nm குறைவான இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினிலும் கிடைக்கும். இந்த எஞ்சின் 110 bhp (4000 rpm) திறனும் 250Nm (1500-3000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் டீசல் என்ஜினில் 7 ஸ்பீட் கொண்ட DSG ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வோல்க்ஸ்வேகன் அமியோ பேஸ் மாடலில் கூடுதலாக கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு நிற பின்புற ஸ்பாய்லர், புதிய லாய் வடிவமைப்பு மற்றும் சில ஒப்பனை மாற்றங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற அமியோ மடல்களில் கிடைக்கும் அணைத்து வசதியும் இந்த மாடலிலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.