ரூ 55.90 லட்சம் விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது வோல்வோ XC60

வோல்வோ நிறுவனம் இந்தியாவில்  XC60 மாடலை ரூ 55.90 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் வோல்வோ நிறுவனத்தின் SPA பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் வோல்வோ நிறுவனத்தின் XC90, S90 மற்றும் V90 மாடல்களும் இதே பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய XC60 மாடல் இன்ஸ்க்ரிப்ஷன் எனும் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். 

இந்த மாடல் XC90 மாடலின் டிசைன் தத்பரியதில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அளவு மட்டும் சற்று சிறியதாக இருக்கும். இந்த மாடல் CBU முறையில் இந்தியாவில் வெளியிடப்படுவதால் வெளிநாட்டு மார்க்கெட்டில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த மாடலில் உள்ளது. குறிப்பாக வெப்பப்படுத்தும் இருக்கை போன்றவை இந்தியா மார்கெட்டிற்கு அவசியமில்லாத ஒன்று.  எனினும் CBU முறையில் வருவதால் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோராமிக் சன் ரூப், குரூஸ் கன்ட்ரோல், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் அசிஸ்ட், டிரைவ் மோடு மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2.0 லிட்டர் D5 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 235Bhp திறனையும் மற்றும் 480Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ஈகோ, கம்பர்ட், ஆப் ரோடு, டைனமிக் மற்றும் இண்டுவிடுவல் என ஐந்து டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLC, ஆடி Q5 மற்றும் BMW X3 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.