மாருதி பலேனோ மாடலின் ரீபேட்ச் மாடலான டொயோடா க்ளான்சா மாடலின் டீசர் வெளியிடப்பட்டது

டொயோடா நிறுவனம் மாருதி பலேனோ மாடலின் ரீபேட்ச் மாடலான க்ளான்சா மாடலின் டீசர் விடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மே அல்லது ஜூன் மாதம் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தான் மாருதி சுசூகி மற்றும் டொயோடா நிறுவனங்கள் மாடல்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

டொயோடா க்ளான்சா மாடல் அப்படியே மாருதி பலேனோ மாடல் போல தான் இருக்கும். ஆனால், டொயோடா பிராண்டில் வெளியிடப்படும். இந்த மாடல் புதிய BSVI மாசுக்கட்டுப்பாடு கொண்ட 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் தான் கிடைக்கும். இந்த என்ஜின் 83 bhp திறனும் 115Nm  டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல்  ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் கிடைக்கும். இதேபோல் மேலும் சில மாடல்களை இவ்விரு நிறுவனங்களும் பரிமாறிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.