நான்கு மாடல்களை விற்பனையில் இருந்து நிறுத்தும் ஹீரோ

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் மேஸ்ட்ரோ ஸ்கூட்டர், இக்னைட்டர், பேஷன் X ப்ரோ மற்றும் இம்பல்ஸ் போன்ற மாடல்களின் விற்பனையை 2016 ஆம் ஆண்டு இறுதியில் நிறுத்த உள்ளது. இந்த மாடல்களை விற்பனையில் இருந்த நிறுத்த மிக முக்கிய காரணம் இந்த மாடல்களுக்கான ராயல்டியை ஹோண்டா நிறுவனத்திற்கு ஹீரோ நிறுவனம் கொடுக்க வேண்டும். ஏனெனில் ஹோண்டா நிறுவன என்ஜின் தான் இந்த மாடல்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹீரோ நிறுவனம் மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் டூயட் ஸ்கூட்டர்களை தான் சொந்த 110cc எஞ்சினுடன் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஹீரோ நிறுவனமே முழுவது தயாரித்த ஸ்ப்ளெண்டர்  i- ஸ்மார்ட் மாடலை சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது.  பேஷன் X ப்ரோ மாடல் நிறுத்தப்பட்டாலும் மீண்டும் ஹீரோ நிறுவன எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்னைட்டர் மற்றும் இம்பல்ஸ் மாடல்கள் குறைந்த விற்பனை காரணமாக நிறுத்தினாலும் இதில் இம்பல்ஸ் மாடல் மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இம்பல்ஸ் செக்மென்ட்டில் வேறு எந்த மாடலும் இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.