பின்புறமும் டிஸ்க் ப்ரேக் கொண்ட சுசுகி ஜிக்சர் மற்றும் ஜிக்சர் SF மாடல்கள் வெளியிடப்பட்டது

சுசுகி நிறுவனம் பின்புறமும் டிஸ்க் ப்ரேக் கொண்ட ஜிக்சர் மற்றும் ஜிக்சர் SF மாடல்களை முறையே ரூ.91,245 மற்றும் ரூ.99,791 Chennai ஆன் ரோடு விலையில் வெளியிட்டுள்ளது. ஜிக்சர் மாடலில் இரட்டை வண்ண வேரியண்டுகளில்  மட்டும் பின்புற டிஸ்க் ப்ரேக் கிடைக்கும்.

ஜிக்சர் SF  மாடலின் அணைத்து வேரியண்டுகளிலும் பின்புற டிஸ்க் ப்ரேக் கிடைக்கும்.
 இந்த இரண்டு மாடல்களிலும்  154.9 cc  கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின்  14.8 bhp (8000rpm)   திறனும் 14 NM (6000rpm)  டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.இந்த மாடல் 63 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

மேலும் ஜிக்சர் மாடல் கருப்பு, ப்ளூ, கருப்பு மற்றும் சிவப்பு கலந்த கலவை, கருப்பு மற்றும் பச்சை கலந்த கலவை மற்றும் ப்ளூ மற்றும் வெள்ளை கலந்த கலவை என ஐந்து வித வண்ணங்களிலும் ஜிக்சர் SF  மாடல் கருப்பு, சிவப்பு மற்றும் ப்ளூ வண்ண மோடோ GP  எடிசன் என மூன்று வித வண்ணங்களிலும் கிடைக்கும்.
 

வேரியன்ட் வாரியாக ஜிக்சர் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை விவரம்:
Pearl Mira Red /Glass sparkle Black  - Rs.97303
Moto GP Edition  - Rs.99002
Pearl Mira Red /Glass sparkle Black (With Rear Disc Brake)  - Rs.99791 
Moto GP Edition (With Rear Disc Brake) - Rs.101490

வேரியன்ட் வாரியாக ஜிக்சர் மாடலின் சென்னை ஆன் ரோடு விலை விவரம்:
All Mono Tone Colors - Rs.87793
All Dual Tone Colors - Rs.88916
All Dual Tone Colors (With Rear Disc Brake)  - Rs.91245

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.