விரைவில் வெளியிடப்படும் ஜீப் ரெனெகேட்

ஃபியட்  நிறுவனம் ஜீப் ரெனெகேட் மாடலை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜீப் செரோக்கி, வ்ரேங்க்ளர் மற்றும் ரெனேகேட் ஆகிய மாடல்கள்  2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என ஏற்கனவே ஃபியட்  நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பியட் நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே அபார்த், மசராட்டி மற்றும் பெர்ராரி பிராண்டுகளை விற்பனை செய்து வருகிறது. தற்போது ஜீப் பிராண்டும் அதில் இனைய உள்ளது. ஜீப் நிறுவனம் உலக அளவில் SUV  மற்றும் ஆப் ரோடு வாகனங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற நிறுவனம். ஜீப் மாடல்கள் முன்பு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்ககது. 

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடக்கும் வாகன கண்காட்சியில் இந்தியாவில் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் வெளியிடப்படும் தேதி குறித்த பிற தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.