ஜூன் 2 ஆம் தேதி வெளியிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் GLC SUV

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில்  GLC SUV மாடலை ஜூன் 2 ஆம் தேதி வெளியிட இருக்கிறது.  இது C-கிளாஸ் செடான் மாடலின் SUV  வெர்சன் ஆகும். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 12 மாடல்களை வெளியிய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே நான்கு மாடல்களை வெளியிட்டுவிட்டது இது ஐந்தாவது மாடல் ஆகும்.

இந்த மாடல் பெரிய கிரில், பம்பர், வீல் ஆர்சுகள், பிளாஸ்டிக் கிலாடிங்குல், இரட்டை புகை போக்கி என முழுமையான SUV தோற்றத்தை தருகிறது. C-கிளாஸ் செடான் மாடலின் உட்புறம் அப்படியே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் உட்புறம்  பீஜ் மற்றும் கருப்பு என இரண்டு விதங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் டீஸல் மற்றும் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும். மேலும் இந்த மாடலில் 9 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசனும் 4MATIC எனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மும் கிடைக்கும். இதன் 4MATIC சிஸ்டம் பல டெர்ரைன் ஆப்சன்களில் கிடைக்கும். இந்த மாடல் ஆடி Q5 மற்றும் BMW  X3 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.