வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலைட் i20 CVT

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை எலைட் i20 மாடலை CVT டிரான்ஸ்மிஷன் உடன் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. CVT டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் மேக்னா மற்றும் ஆஷ்டா வேரியண்டில் மட்டும் முறையே ரூ 7,04,950 மற்றும் ரூ 8,16,500  டெல்லி ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை எலைட் i20 மாடல் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

CVT டிரான்ஸ்மிஷன் பெட்ரோல் எஞ்சினில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 117Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, CVT டிரான்ஸ்மிஷன் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. 

புதிய ஹூண்டாய் எலைட் i20 மாடல் வோல்க்ஸ்வேகன் போலோ, மாருதி பலேனோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.